ராஜீவ்காந்தி படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
பாளையங்கோட்டையில் ராஜீவ்காந்தி படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், முரளிராஜா, வக்கீல் அணி இணைத்தலைவர் மகேந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.