காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட முயற்சி

காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2023-07-08 18:40 GMT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில், அவருக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறையின் மாநில செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில், அக்கட்சியினர் நேற்று காலை பெரம்பலூர் காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்