காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்

Update: 2023-03-26 18:45 GMT

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சாலையில் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்து சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். போராட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கனிவண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்று பேசினார். தொடர்ந்து இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமைதியாக அமர்ந்திருந்தனர். இதில் நிர்வாகிகள் ஜம்புகென்னடி, வக்காரமாரிஅன்பழகன், ராஜா, வடவீரபாண்டியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்