காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

தெள்ளாரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-31 12:25 GMT

வந்தவாசி

எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் காங்கிரஸ் கட்சியினா் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சி.பன்னீர்செல்வம், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜபாண்டியன், ஊடகப் பிரிவு வந்தை பிரேம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய பா.ஜ.க .அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த தெள்ளார் போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் வந்தவாசி- திண்டிவனம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்