காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்; 22 பேர் கைது

காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-07 19:23 GMT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில், அவருக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து அரியலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சங்கர், நகர தலைவர் சிவகுமார் மற்றும் கட்சியினர் அண்ணா சிலை அருகில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரியலூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர். பின்னர் போக்குவரத்தை சரி செய்தனர். இதேபோல் நேற்று மதியம் தா.பழூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அழகானந்தம் தலைமையில் கட்சியினர் விக்கிரமங்கலம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், மறியலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்