மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

Update: 2022-06-24 20:42 GMT

பெருந்துறை:

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆர்ப்பாட்டம்

ராணுவத்தில் சேருவதற்கு "அக்னிபத்" என்கிற திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் விசாரணையை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று பெருந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோஷம்

பெருந்துறை பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள்ராஜன் தலைமை தாங்கினார். பெருந்துறை வடக்கு வட்டார தலைவர் ஆண்டமுத்துசாமி, முன்னாள் தலைவர் வலசுகிருஷ்ணன், மாநில சேவாதள அமைப்பாளர் நல்லாம்பட்டி நடராஜ், பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியாபேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, சென்னிமலை வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சண்முகம், திருவாச்சி மணி, ஊத்துக்குளி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சர்வேஸ்வரன், மாவட்ட அமைப்பு செயலாளர் நடராஜன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்