மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆம்பூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-20 18:13 GMT

ஆம்பூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆம்பூர் நகர தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் கொத்தூர் மகேஷ், மாவட்ட நிர்வாகி மின்னூர் சங்கர், பேரணாம்பட்டு ஒன்றிய தலைவர் சங்கர் மற்றும் கட்சியினர் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்