ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-05-26 18:45 GMT

ஊட்டி

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி அழைக்கப்படாததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நேற்று அறப்போராட்டம் நடந்தது. நீலகிரி மாவட்ட உதகை ஏடிசி சுதந்திர திடல் பகுதியில் மாவட்ட பழங்குடியினர் பிரிவு சார்பில் அறப்போராட்டம் நடந்தது. இதற்கு காங்கிரஸ் மாநில பழங்குடியினர் பிரிவு மாநில தலைவர் பிரியா நஸ்மிகர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், ஆங்கிலேயர்கள் ஆட்சியிலிருந்து விடுப்பட்டு இந்தியா குடியரசு நாடாக மாறியுள்ளது. இந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் அழைக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. மேலும், குடியரசு தலைவர் ஒரு பெண் மட்டுமல்லாமல் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். அவர் தான் கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும். இதற்கு வாய்ப்பளிக்காத மத்திய அரசின் சர்வாதிகார போக்கு விரைவில் வீழ்ச்சி அடையும்' என்றார்.

போராட்டத்தில், மாவட்ட தலைவர் கணேஷ் எம்.எல்.ஏ., பாரத ஒற்றுமை யாத்திரை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் கெம்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்