கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் கோவை, சூலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் கோவை, சூலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெறக் கோரியும், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்க கோரியும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சூலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோ கரன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ராயல் மணி வரவேற்று பேசினார். மாநில செயலாளர் வி.கணேஷ்மூர்த்தி, எம்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஜி.ஆறுச் சாமி, எஸ்.வி.வெங்கடாபதி, எஸ்.பி.சிவகுமார், வி.எம்.ரங்கசாமி, தீரன் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காந்திபார்க்
இதேபோல் கோவை காந்திபார்க் பகுதியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ், தொண்டாமுத்தூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கும் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார். பழையூர் செல்வராஜ், பச்சமுத்து, கோவிந்தராஜ், சொக்கம்புதூர் கனகராஜ், கே.எல்.மணி. ஜி.வி.நவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.எஸ்.மணி வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வி.எம்.சி.மனோகரன் பேசும்போது, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. இது அவருக்கு தமிழக மக்கள் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. மேலும் அவர், சூதாட்ட அதிபர்களுக்கு சாதமாக செயல்படுகிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. எனவே கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.
இதில், மாவட்ட நிர்வாகிகள் வி.எம்.ரங்கசாமி, செல்வபுரம் ஆனந்த், சக்தி சதீஷ், வி.ஜி.பி.நடராஜ், குனியமுத்தூர் ஆனந்தன், பாலு யாதவ், ஜமால், ஆகாஷ், பேரூர் மயில், பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.