சின்னசேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சின்னசேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-12 18:45 GMT

சின்னசேலம்,

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சின்னசேலம் தொலை தொடர்பு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷர்மிளா தலைமை தாங்கினார். மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் பவுனாம்பாள், செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட துணை தலைவி அஞ்சலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில துணை தலைவியும் சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருமான லாவண்யா ஜெய்கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் வீரமுத்து, சின்னசேலம் நகர தலைவர் ஏழுமலை, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சீனிவாசன், செய்தி தொடர்பு தலைவர் கார்த்தி, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மஞ்சுளா, சாந்தி, சுமதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மகிளா காங்கிரஸ் துணை தலைவி சத்தியா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்