சுவாமிமலையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சுவாமிமலையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-21 20:10 GMT

கபிஸ்தலம்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சுவாமிமலை பேரூர் காங்கிரஸ் மற்றும் விவசாயப் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் சுவாமிமலை தேரடியில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில விவசாயப் பிரிவு பொதுச்செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். பேரூர் காங்கிரஸ் நகரத் தலைவர் ராமலிங்கம் ஸ்தபதி வரவேற்றார்.. கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர் கவிஞர் அய்யப்பன், பேராசிரியர் சீனு. நலங்கிள்ளி, பாலுகாடு வெட்டியார் உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் வைத்தியநாதன், துணைத் தலைவர்கள் ரத்தினசாமி, விஜயகுமார், முருகானந்தம், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பேரூர் காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்