தமிழக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-20 18:45 GMT

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழக கவர்னரை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ராமானுஜம் வரவேற்றார்.. ஆர்ப்பாட்டத்தில், சட்டத்திற்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் தமிழக மக்களுக்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்படும் தமிழக கவர்னரை கண்டித்தும், சட்டப்பேரவையில் தமிழக அரசின் ஆண்டு அறிக்கையை புறக்கணித்து காமராஜர், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பெயரை கூறாமல் அவமதிப்பு செய்த கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் மூங்கில் ராமலிங்கம், பூவாலை மதிவாணன், மூவலூர் ரங்கநாதன், குத்தாலம் சூர்யா, ராஜா, சுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்