காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-31 18:57 GMT

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு தட்கல் டிக்கெட் எடுக்க வரும் பயணிகளுக்கு இருக்கை அமைத்து தர ரெயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும். ரெயில் நிலைய பகுதியில் இருந்து ஸ்ரீபுரம் செல்லும் வழியில் மேம்பாலத்தில் உள்ள நடைபாதை படிக்கட்டுகளை சீரமைத்து தர வேண்டும். ரெயில் நிலைய பழைய கட்டிடத்தில் முகப்பு பகுதியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த வண்ணம் இருப்பதாக பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே அதனையும் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் பி.வி.டி. ராஜேந்திரன், முகமது அனஸ் ராஜா, கெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு ரூ.5-க்கு குடிதண்ணீர் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த திட்டம் நடை முறைப்படுத்தப்படாமல் பயணிகள் கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறி ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அவர்களுடன் ரெயில் நிலைய மேலாளர் முருகேசன், மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் சிலர் கோஷங்கள் எழுப்பியவாறு ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.

11 பேர் கைது

இதைத்தொடர்ந்து மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கவிபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் மகேந்திரபாண்டியன், மாவட்ட துணை தலைவர்கள் மாரியப்பன், லெனின் பாரதி, வண்ணை சுப்பிரமணியன், மகளிர் அணி தலைவர் ஸ்டெல்லா மேரி உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்