காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதையடுத்து புகழூர் நகராட்சி பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், புகழூர் நகராட்சி உறுப்பினருமான சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பிரதமர் மோடி, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.