காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-26 19:22 GMT

கர்நாடக மாநிலத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மீது குஜராத் மாநிலம், சூரத் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை நாடாளுமன்ற செயலகம் பறித்தது.

இதனை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை முதல் மாலை வரை அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து வாய் மற்றும் கையில் கருப்பு துணியை கட்டி, நூதன அறவழி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்