ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். இதில் மாநில விவசாய காங்கிரஸ் செயலாளர் வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.