காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொது மக்களின் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்த மத்திய அரசை கண்டித்து அரிமளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.