காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் கவர்னர் ரவி நடந்து வருவதாக கூறி அவரை கண்டித்து சிவகாசியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் தலைமை தாங்கினார். நகரதலைவர் சேர்மத் துரை முன்னிலை வகித்தார். இதில் நகர துணைத்தலைவர் முத்து மணி, வட்டார தலைவர்கள் சங்கர்ராஜ், ஜி.பி.முருகன், தர்மராஜ், பைபாஸ் வைரகுமார், மாணவரணி சேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.