நாங்குநேரியில் இருந்து களக்காட்டுக்கு காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபெற்று ஓராண்டை நிறைவையொட்டி, நாங்குநேரியில் இருந்து களக்காட்டுக்கு காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர். இதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-09-07 19:53 GMT

இட்டமொழி:

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபெற்று ஓராண்டை நிறைவையொட்டி, நாங்குநேரியில் இருந்து களக்காட்டுக்கு காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர். இதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

ஒற்றுமை யாத்திரை ஓராண்டு நிறைவு

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த ஆண்டு இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டார். இந்த யாத்திரை நடைபெற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டவாரியாக பிரசார இயக்கம், நடைபயணம், பொதுக்கூட்டம் நடத்துமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கேட்டு கொண்டனர்.

அதன்படி நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று நாங்குநேரியில் இருந்து களக்காடு காந்தி சிலை வரை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

காங்கிரசார் நடைபயணம்

நாங்குநேரி கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்லூரி முன்பிருந்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தொடங்கிய நடைபயணத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் த.காமராஜ், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர்கள் செல்லப்பாண்டி, சந்திரசேகர், பொதுச்செயலாளர் நம்பித்துரை உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்று நடைபயணம் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்