காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
வேடசந்தூரில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரையாக சென்றனர்.
வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில், காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினத்தையொட்டி பாத யாத்திரை நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். குஜிலியம்பாறை வட்டார தலைவர்கள் கோபால்சாமி, தர்மர், வேடசந்தூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாதயாத்திரை தோப்புபட்டி, தங்கமாபட்டி பிரிவு, புதுரோடு, வைவேஸ்புரம் வழியாக எரியோடு வந்தது. அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு வடமதுரையில் பாதயாத்திரை நிறைவு பெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர் சோமுராஜ், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தொகுதி தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.