காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

மாதனூரில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்தினர்.

Update: 2022-08-12 17:37 GMT

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையெட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடக்கிறது. அதன்படி மாதனூர் ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடந்தது. மின்னூரில் இருந்து தொடங்கிய பாதயாத்திரைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் கொத்தூர் மகேஷ், சட்டமன்ற பொறுப்பாளர் சாந்தகுமார், மாவட்ட செயலாளர் மின்னூர் சங்கர் முன்னிலை வகித்தனர். பாதயாத்திரையில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாதனூரில் இருந்து ஆம்பூர் வரை பாதயாத்திரையாக சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்