ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-02 17:05 GMT

ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து ஆற்காடு கஸ்பா அரசு மருத்துவமனை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது கட்சியின் நிர்வாகி எஸ்.பியாரேஜான் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜி.விநாயகம், வட்டார தலைவர் எஸ்.எம்.வீரப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம் கலந்துகொண்டு பேசினார்.

இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே.ஓ.நிஷாத் அகமத், மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.கேசவன், பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆற்காடு பஸ் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆற்காடு சட்டமன்ற தொகுதி தலைவர் சையத்முஜீப் தலைமை தாங்கினார். தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலச்சந்தர் கலந்து கொண்டு கையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன உரை நிகழ்த்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் பியாரேஜான், இலியாஸ், அப்துல்லா, பைரோஸ், குப்புசாமி ராமதாஸ், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்