இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-21 10:33 GMT

திருப்பூர்

ராணுவத்தில் ஆள் சேர்ப்பதில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது. இதேபோல் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகர் மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் குமரன் சிலை முன் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் சகாபுதீன், துணை தலைவர் நவீன், மாநகர் மாவட்ட தலைவர் பாபு, ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் செந்தில் குமார், கட்சியின் மாநகர் மாவட்ட பொதுசெயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் சரவணன், மகளிர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சகாய மேரி, சிறுபாண்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து இஸ்மாயில், இளைஞர் காங்கிரஸ் பல்லடம் சட்டமன்ற தொகுதி தலைவர் பிரகாஷ், காங்கேயம் சட்டமன்ற தொகுதி தலைவர் கவின்குமார், அவினாசி சட்டமன்ற தொகுதி தலைவர் பிரகாஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்