காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக, திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான ரெக்ஸ் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏர்போர்ட் பகுதி கோட்ட தலைவர் கனகராஜ், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷீலா செலஸ் மற்றும் நிர்வாகிகள் கோகிலா, விஜயலட்சுமி, பகதூர்ஷா, சையது, வளன்ரோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.