காங்கிரஸ் கட்சி கூட்டம்

காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது.

Update: 2023-04-08 18:45 GMT

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன் கோபால், செந்தாமரை கண்ணன், மாநில செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்பிய ஒரே காரணத்திற்காக அவரின் எம்.பி. பதவியை திட்டமிட்டு பா.ஜ.க. அரசு பறித்துள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 15-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ளது. 20-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் நடைபெறும். தொடர்ந்து வரும் 30-ந்தேதி வரை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றனர். இந்த கூட்டத்தில் நகர் தலைவர் கோபி, வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், திருப்புல்லாணி சேதுபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துகிருஷ்ணன், மேகநாதன், சிறுபான்மை பிரிவு வாணி இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்