கோவில்பட்டியில் காங்கிரஸ் பிரமுகர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் காங்கிரஸ் பிரமுகர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

Update: 2022-06-09 14:56 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் அய்யலுசாமி கழுத்தில் காசோலை மாலையணிந்து முட்டி போட்டு நடந்து வந்தார். தமிழக அரசு கந்து வட்டி கொடுமையை ஒழிக்க காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளித்து சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பின்னர் அவர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்