நாகை வருமான வரித்துறை அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகை

ராகுல் காந்தியின் எம்.பி.பதவி நீக்கத்தை கண்டித்து நாகை வருமான வரித்துறை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.;

Update: 2023-04-20 18:45 GMT


ராகுல் காந்தியின் எம்.பி.பதவி நீக்கத்தை கண்டித்து நாகை வருமான வரித்துறை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

முற்றுகை போராட்டம்

நாகை வருமான வரி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமை தாங்கினார். நகர தலைவர் உதயசந்திரன் முன்னிலை வகித்தார். நகர துணைத்தலைவர் நத்தர் வரவேற்றார்.

இதில் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி, வட்டார தலைவர்கள் வேணுகோபால், சிங்காரவேலு, சீனிவாசன், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோஷங்கள் எழுப்பினர்

இதில் ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையில் போலீசார் வருமான வரி அலுவலக நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாகை வருமான வரி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல வேதாரண்யம் தபால் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்