ஜி.கே.மூப்பனார் படத்துக்கு காங்கிரசார் மரியாதை

பாளையங்கோட்டையில் ஜி.கே.மூப்பனார் படத்துக்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.

Update: 2023-08-19 19:00 GMT

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டின் முன்பு ஜி.கே.மூப்பனார் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கு ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மண்டல தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்