காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

கும்பகோணத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

Update: 2023-04-09 19:01 GMT

கும்பகோணம்:

தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நேற்று கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோகநாதன் தலைமை தாங்கினார். கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், நகரத்தலைவர் மிர்சாவுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹிமாயூன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வருகிற 15-ந்தேதி காலை 10 மணிக்கு கும்பகோணத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடத்துவது. 21-ந்தேதி மாலை 4 மணிக்கு கும்பகோணம் காந்தி பூங்காவில் முன்னாள் மத்தியமந்திரி மணிசங்கர் அய்யர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்துவது. இந்த போராட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, வட்டார அமைப்புகளின் சார்பில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்