காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-18 19:39 GMT

கும்பகோணம்:

நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியை விசாரணை என்கிற பெயரில் பா.ஜ.க. அரசு அலைக்கழிப்பதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கும்பகோணத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோகநாதன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள், நகர, வட்டார, பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்