வீரபாண்டி கோவில் திருவிழாவின்போது புறவழிச்சாலை வழியாக வாகனங்களை இயக்க கோரிக்கை

வீரபாண்டி கோவில் திருவிழாவின்போது புறவழிச்சாலை வழியாகவே வாகனங்களை இயக்க வேண்டும் என்று வர்த்தகர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-05-02 21:00 GMT

தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் கணேஷ் மிஸ்ராம் மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம், அவர்கள் 3 கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

தேனி காமராஜர் பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் என்று குறிப்பிடப்படுகிறது. அனைத்து டவுன் பஸ்களிலும் பழைய பஸ் நிலையம் என்று இருப்பதை காமராஜர் பஸ் நிலையம் என மாற்ற வேண்டும். பஸ் நிலைய நுழைவு வாயிலில் காமராஜர் பஸ் நிலையம் என வளைவுகள் அமைக்க வேண்டும். வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 9-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் போது புறவழிச்சாலை அடைக்கப்பட்டு வாகனங்கள் சுமார் 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியது உள்ளது.

அதே நேரத்தில் திருவிழா நடக்கும் பகுதியில் வி.ஐ.பி. பாஸ் வைத்துக்கொண்டு வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் மக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே, இந்த ஆண்டு நெடுஞ்சாலை அடைக்கப்படுவதை தடுத்து, புறவழிச்சாலை வழியாகவே வாகனங்களை இயக்க வேண்டும். அதுபோல், கோவில் திருவிழா நடக்கும் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முழுமையாக தடை விதிக்க வேண்டும். பெரியகுளத்தில் இருந்து தாமரைக்குளம், வடுகபட்டி, வைகை அணை வழியாக ஆண்டிப்பட்டிக்கு மக்களின் நலன் கருதி பஸ்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்