காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

கடையத்தில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update:2023-06-24 00:15 IST

கடையம்:

கடையத்தில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அனைத்து பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் அழகுதுரை, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் ஆதிமூலம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் அவர், மாநில ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.மாரிகணேசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

கூட்டத்தில் கடையம் மெயின் ரோட்டில் வாங்கப்பட்ட பட்டா இடத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைப்பது, கடையத்தில் இருந்து ராமநதி அணை வரை உள்ள சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்துவது, கடையத்திற்கு புதிய தாலுகா அந்தஸ்து வழங்க கேட்டுக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஐ.என்.டி.யு..சி மாநில செயலாளர் எஸ்.மாரிகணேசன் மற்றும் மும்பை வி.பி.ராமையா உள்பட கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்