காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.

Update: 2022-08-13 15:43 GMT

சாயல்குடி, 

சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை மற்றும் துண்டுபிரசுரம் வினியோகம் நிகழ்ச்சி நடந்தது. சாயல்குடி காங்கிரஸ் நகர் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் சேவா தள தலைவர் கணேசன், பொதுச் செயலாளர் ஜெயராஜ், தொகுதி பொறுப்பாளர் உத்தர லிங்கம், நரிப்பையூர் வட்டார தலைவர் ஞானசேகரன், சாயல்குடி அப்துல்சத்தார், சிக்கல்ஊராட்சி துணைத் தலைவர் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாநில செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பாதயாத்திரை சென்று மத்திய அரசை கண்டித்து துண்டு பிரசுரங்களை சாயல்குடி, நரிப்பையூர், கன்னி ராஜபுரம், உள்ளிட்ட கிராம பகுதிகளில் வழங்கினர். நிகழ்ச்சியில் சாயல்குடி நகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, முன்னாள் நகர் தலைவர் முனியசாமி, மாவட்ட செயலாளர்கள் அமிர்தராஜ், மைக்கேல் ராஜ், வெள்ளப்பட்டி கந்தப்பழம், வார்டு செயலாளர் அந்தோணி ராஜ், நகர் பொதுச் செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்