கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் கையொப்பமிடப்பட்ட வாழ்த்து கடிதம்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் கையொப்பமிடப்பட்ட வாழ்த்து கடிதம் வழங்கப்பட்டது.

Update: 2023-09-24 19:44 GMT

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சீபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த 15-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றைய தினமே பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அந்த திட்டத்தின் மூலம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு பணம் எடுக்கும் ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தன்னை தேர்ந்தெடுத்து மக்கள் பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கையொப்பமிட்ட கடிதங்கள் அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக சுமார் 76 ஆயிரத்து 104 பயனாளிகளுக்கு கடிதங்கள் வரப்பட்டுள்ளது. இக்கடிதங்கள் அனைத்தும் கொரியர் நிறுவனத்தின் மூலம் குடும்ப தலைவிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதன் முதலாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்குளம் பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் கடிதம் நேற்று வழங்கப்பட்டது. கடிதத்தை பெற்று கொண்ட பயனாளிகளான குடும்ப தலைவிகள் முதல்-அமைச்சரே தங்களின் பெயருக்கு கடிதம் எழுதி இருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்