அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து - திமுக எம்.பி கடும் எதிர்ப்பு

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு திமுக எம்.பி செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-01 04:59 GMT

சென்னை,

விநாயகர் சதுர்த்தி நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்து சமய அறநில ையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு திமுக எம்.பி செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து சமய அறநிலையத்துறையின் டுவிட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்த டுவீட்டை மேற்கோளிட்டு டுவீட் செய்துள்ள தர்மபுரி எம்.பி செந்தில்குமார், இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான் எனவும் கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல எனவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்