சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
மாவட்ட சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மையத்தில் மாவட்ட அளவிலான பல்வேறு வயதினருக்கு சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கோவில்பட்டி கஸ்தூரிபாய் பள்ளி, பிருந்தாவன் பள்ளி, புதுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகள் ஆனந்த லட்சுமி, அருண்குமார், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முதலிடமும், அம்பரீஸ் 2-வது இடமும், மாணிக்கராஜா, முகில்குமார் 3-ம் இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை கோவில்பட்டி நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கருணாநிதி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகரசபை கவுன்சிலர் ஜோதிபாசு, புதுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சியாளர் காசி மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.