மாரத்தான் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு
இளையான்குடியில் மாரத்தான் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இளையான்குடி,
சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற ரெட்மாரத்தான் போட்டியில் டாக்டர் சாகிர்உசேன் கல்லூரியில் கணிப்பொறி பயன்பாடு 3-ம் ஆண்டு வணிகவியல் படிக்கும் மாணவர் விஜயகுமார் 10-வது இடம் பெற்று ரூ. 1000 ரொக்க பரிசும், காரைக்குடி கிரீடா பாரதி சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான மாரத்தான் போட்டியில் 15-வது இடமும் பெற்று பரிசு பத்திரம் பெற்றார். 2 போட்டிகளிலும் ரொக்க பரிசு பெற்று வெற்றி பெற்ற மாணவர் விஜயகுமாரை கல்லூரி ஆட்சி குழு செயலாளர் ஜபருல்லாஹ்கான் மற்றும் கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். இந்நிகழ்வில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.