"திரவுபதி முர்முவை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்" - பிரேமலதா விஜயகாந்த்
சென்னை வந்த திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை,
ஜனாதிபதி பதவிக்கு, நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு, வாழ்த்துக்கள் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு பெண் வேட்பாளராக திரவுபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துக்கள் என்றார். .