திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு பாராட்டு

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-02-21 18:45 GMT

திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா கடந்த 18-ந் ேததி இரவு முதல் அதிகாலை வரை விடிய, விடிய நடந்தது. அப்போது நாட்டியாஞ்சலி விழாவும் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஒருவர் செல்போனையும், மற்றொரு நபர் தனது கைக்கெடிகாரத்தையும் தவறவிட்டனர். இவற்றை கோவில் ஊழியர்கள் அண்ணாதுரை, செல்லபாண்டியன், தமிழ்ச்செல்வம் ஆகியோர் பத்திரமாக மீட்டு செயல் அலுவலர் முருகையனிடம் ஒப்படைத்தனர். பின்னர் பொருட்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் வழங்கப்பட்டது. பக்தர்கள் தவற விட்ட பொருட்களை நேர்மையாக மீட்டு ஒப்படைத்த கோவில் ஊழியர்களை கோவில் செயல் அலுவலர் பாராட்டினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாவட்ட நுகர்வோர் சங்க தலைவர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்