குரூப்-2 தேர்வில் பதிவு எண்கள் மாறியதால் குளறுபடி

நாகையில் நடந்த குரூப்-2, தேர்வில் பதிவு எண்கள் மாறியதால் குளறுபடி ஏற்பட்டது. இதை தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியத

Update: 2023-02-25 18:45 GMT

நாகையில் நடந்த குரூப்-2, தேர்வில் பதிவு எண்கள் மாறியதால் குளறுபடி ஏற்பட்டது. இதை தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியது.

குரூப் -2 தேர்வு

தமிழக அரசு துறைகளில் உள்ள 5,446 காலிபணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்-2 தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பொதுத்தாள் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நாகை மாவட்டத்தில் பாப்பாக்கோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரி, நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரி என 2 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற்றது.

பதிவு எண்கள் மாறியதால் 1 மணி நேரம் தாமதம்

மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை எழுதுவதற்காக 748 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் 519 பேரும், சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் 200 பேரும் என மொத்தம் 719 பேர் தேர்வு எழுதினர். 29 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதில் ஏ.டி.எம். மகளில் கல்லூரி மையத்தில் நடந்த தேர்வில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறியதால் குளறுபடி ஏற்பட்டது.. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் உரிய நேரத்தில் தேர்வு தொடங்கப்படவில்லை.பதிவு எண்கள் மாறியதை சரி செய்யப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக 3 மணிக்கு தேர்வு தொடங்கியது.இந்த தேர்வு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Tags:    

மேலும் செய்திகள்