குழப்பத்தை ஏற்படுத்தும் பெயர் பலகை

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் பெயர் பலகையை மாற்றி அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2023-03-29 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் பெயர் பலகையை மாற்றி அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தவறான பெயர் பலகை

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு செல்லும் சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்றது. இதையொட்டி சாலையோரம் இருந்த ஊருக்கு வழி காட்டும் பெயர் பலகைகள், பயணிகள் நிழற்குடைகள் அகற்றப்பட்டது. தற்போது சாலை விரிவாக்க பணி நிறைவடைந்து விட்டதால், அந்த பெயர் பலகைகளை மீண்டும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் பெயர் பலகைகள் தவறாக அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ராமபட்டிணம் பிரிவு என்ற இடத்தில் தப்பட்டை கிழவன் புதூர் என்ற பெயர் பலகை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வருபவர்கள் வழிமாறி செல்லும் நிலை உள்ளது.

மாற்றி அமைக்க வேண்டும்

இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது:-

சாலை விரிவாக்க பணியின்போது பெயர் பலகைகள், பயணிகள் நிழற்குடைகள் அகற்றப்பட்டன. அவை மீண்டும் அமைக்கப்பட்டாலும், சரியாக அமைக்கப்படுவது இல்லை. பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் இருந்து, குறிப்பிட்ட பிரிவில் இறங்கி 3 கிலோ மீட்டர் தூரம் சென்றால் ராமபட்டிணம் ஊர் வரும். அந்த ஊருக்காக, மெயின்ரோட்டில் உள்ள பிரிவில் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு பதிலாக தப்பட்டை கிழவன் புதூர் பிரிவு என்ற பெயர் பலகையை நெடுஞ்சாலைத்துறையினர் வைத்துள்ளனர். இது அனைவரையும் குழப்பும் விதத்தில் உள்ளது. எனவே பெயர் பலகையை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்