மெஞ்ஞானபுரத்தில் இடப்பிரச்சினையில் மோதல்; 8 பேர் மீது வழக்கு

மெஞ்ஞானபுரத்தில் இடப்பிரச்சினையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-06-13 18:45 GMT

மெஞ்ஞானபுரம:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு தர்மபுரி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (வயது 48). விவசாயி. இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த சூசை மாணிக்கம் என்பவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகநயினார் வீட்டிற்கு சூசை மாணிக்கம், அவரது உறவினர் விஜயகுமார் ஆகியோர் சென்று இட பிரச்சினை தொடர்பாக தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் சூசைமாணிக்கம், விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து ஆறுமுகநயினாரை தாக்கியுள்ளனர். இது குறித்து ஆறுமுக நயினார் மெஞ்ஞானபுரம் போலீஸில் புகார் செய்தார்.

இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகநயினார் தரப்பினர் சூசைமாணிக்கத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், ஆறுமுகநயினார் (48), முனியாண்டி மகன்கள் மணிகண்டன் (வயது29), பாண்டி (28), முனியாண்டி மனைவி கனகம் (52), ஆறுமுக நயினார் மாணவி லட்சுமி (46), மணிகண்டன் மனைவி மாலதி (29), சூசை மாணிக்கம், விஜயகுமார் ஆகிய 8 பேர் மீதும் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்