சொத்து தகராறில் மோதல்; தந்தை-மகன் கைது

சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-21 18:45 GMT

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் மணிவேல்(வயது 63). இவரது மகன் செல்வமணி(35). தந்தை மகனான இவர்கள் இருவருக்கிடையே சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மணிவேலின் வீட்டிற்கு வந்த செல்வமணி சொத்தை பிரித்து தரும்படி மணிவேலிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாய்த்தகராறு முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு வந்த மணிவேலின் மனைவி செல்லம்மாள்(55), மகன் செல்வகுமார் (32), உறவினர் சேட்டு (42), மேலும் செல்வமணி மனைவி தேவி(26) ஆகியோரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மணிவேல் மற்றும் செல்வமணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்