முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல்; 4 பேர் மீது வழக்கு

தா.பழூர் அருகே இருதரப்பினர் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-01-04 18:51 GMT

மோதல்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் வசித்து வருபவர் சிதம்பரம். அதே பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 35). இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து உள்ளது. சம்பவத்தன்று அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இதைதடுக்க வந்த பாலமுருகனின் தாய் வாசுகி மற்றும் சிதம்பரம் மனைவி ராஜகுமாரி ஆகியோர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

4 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக வாசுகி மற்றும் ராஜகுமாரி ஆகியோர் தா.பழூர் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். இதையடுத்து, ராஜகுமாரி கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன், அவரது தாயார் வாசுகி ஆகியோர் மீதும், வாசுகி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ராஜகுமாரி ஆகியோர் மீதும் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்