இருதரப்பினரிடையே மோதல்; 6 பேர் மீது வழக்கு

இருதரப்பினரிடையே மோதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-04-04 18:21 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வானத்திரியான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த ரவியின் மனைவி செல்வராணி(வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரனின் மனைவி அல்லிக்கும்(42) பாதை பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் செல்வராணி மற்றும் அவரது கணவர் ரவி, மகன் நந்தகுமார் ஆகியோருக்கும், அல்லி மற்றும் அவரது கணவர் ராமச்சந்திரன், உறவினர் திருமுருகன் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் செல்வராணி மற்றும் அல்லி ஆகியோர் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் செல்வராணி, ரவி, நந்தகுமார் மற்றும் அல்லி, ராமச்சந்திரன், திருமுருகன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்