பள்ளி மாணவர்கள் இடையே மோதல்; 3 பேர் காயம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-09 18:25 GMT

மாணவர்கள் இடைநீக்கம்

ஆலங்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, காமராஜர் சிலை பஸ் நிறுத்தம் அருகே பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதில், கவி, பிரபஞ்சன் என்ற இரு மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் இடைநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

மாணவர்கள் காயம்

இந்நிலையில், இன்று மாங்கோட்டையை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த மாங்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த அஜிந்திரன் (வயது 22), மற்றும் 2 மாணவர்கள் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மறியல்

இதையடுத்து மோதலில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி இருதரப்பு மாணவர்களை சேர்ந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் மறி யலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஆலங்குடி- ஆதனக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்