உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல்- மேலூர் நகராட்சி அறிவிப்பு
உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மேலூர் நகராட்சி அறிவித்துள்ளது.
மேலூர்
மேலூர் நகராட்சியில் வீடுகள் மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள மனித கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உடனடியாக உரிமை பெற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் அறிவித்துள்ளார். வாகனங்களில் அரசு விதிப்படி போதிய பாதுகாப்பு அமைப்புகள் செய்திருக்க வேண்டும். தகுந்த ஆவணங்களுடன் வாகன உரிமையாளர்கள் ரூ.2 ஆயிரம் கட்டணத்துடன் நகராட்சியில் விண்ணப்பித்து 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு வழக்குகளும் தொடரப்படும் என்று மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் அறிவித்துள்ளார்.