அனுமதியின்றி வெட்டி லாரியில் ஏற்றிய மரங்கள் பறிமுதல்

சீர்காழி அருகே அனுமதியின்றி வெட்டி லாரியில் ஏற்றிய மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-01-12 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே அனுமதியின்றி வெட்டி லாரியில் ஏற்றிய மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரிய வகை மரங்கள்

சீர்காழி அருகே செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அய்யாவைய்யனாறு உள்ளது. இந்த ஆற்றின் இருகரைகளிலும் வனத்துறைக்கு சொந்தமான அரிய வகை மரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த ஆற்றுக்கரையில் காளிங்கராயன் ஓடை செல்லும் வழியில் இருந்த அரிய வகை மரங்களை பிரபாகரன் என்பவர் அனுமதியின்றி வெட்டி லாரியில் ஏற்றி கொண்டிருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் செல்வி அருள்பிரியா, வருவாய் ஆய்வாளர் பார்வதி ஆகியோருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்ததும் 2 பேரும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மரங்கள் பறிமுதல்

இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தனர். அதன்பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுமதியின்றி மரங்களை வெட்டி லாரியில் ஏற்றி கொண்டு இருந்த லாரியை மரத்துடன் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மரத்தின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்