வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லையில் வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-03-27 19:54 GMT

நெல்லை பேட்டை மயிலபுரத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மகேஸ்வரன் (வயது 27) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மகேஸ்வரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்