வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-29 18:45 GMT

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி ஐயன், தலைமைக் காவலர் பூலையா நாகராஜன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோவில்பட்டி பாரதி நகர் 1-வது தெருவிலுள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான பாழடைந்த வீட்டின் முன்பு சென்ற போது மூடைகளை அடுக்கிக் கொண்டிருந்த கோவில்பட்டி, ஊரணித் தெருவைச் சேர்ந்த லூக்கா அசாரியா மகன் முத்துமாரியப்பன் என்பவர் மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடி விட்டார். இதை தொடர்ந்து கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகன் கோவிந்தராஜ் (51) என்பவரை பிடித்து போலீசார விசாரணை நடத்தினர்். அந்த வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதை ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து அங்கிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் ெசய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்